Latestஉலகம்

பேஸ்புக், அமேசான், ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் மீது “நம்பிக்கைக்கு எதிரான” குற்றச்சாட்டு – 4 மணிநேரம் விசாரணை

நியூயார்க்: தொழில்நுட்ப உலகில் அதீத ஆதிக்கம் செலுத்துவதாகவும், பிற சிறிய நிறுவனங்களை வளர விடமால் கட்டுப்படுத்துவதாகவும் எழுத்த புகார்கள் காரணமாக பேஸ்புக், அமேசான், ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் மீது Anti trust எனும் “நம்பிக்கைக்கு எதிரான” குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அமெரிக்காவின் காங்கிரஸ் குழு விசாரணை நடத்தியது.

அதில், காங்கிரஸ் செயற்குழு சரமாரி கேள்விகளை சுந்தர் பிச்சை, மார்க் ஜுக்கர்பெர்க், டிம் கூக், ஜெப் பெஸோஸ் மீது வைத்தது.
இணையம் முழுக்க தனக்குதான் சொந்தம் என்பது போல பேஸ்புக், அமேசான், ஆப்பிள், கூகுள் செயல்படுகிறது. இப்போதே 90% இணையத்தை பேஸ்புக், அமேசான், ஆப்பிள், கூகுள் ஆகிய நிறுவனங்கள்தான் கட்டுப்படுத்துகிறது. தங்களின் பெரிய சக்தியை பயன்படுத்தி பிற நிறுவனங்களை அவர்கள் முடக்கிறார்கள். போட்டியாளர்ளை காலி செய்து மக்களின் தேர்வு செய்யும் உரிமையை இவர்கள் பறிக்கிறார்கள்.. இவர்களின் தனி ஆதிக்கத்தனத்தை தடுத்து சரியான போட்டியை உருவாக்க சட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் செயற்குழு கூறியது.

இதற்கு பதில் அளித்த அமேசான் தலைமை செயல் அதிகாரி ஜெப் பெஸோஸ், அமேசான் நிறுவனம் அப்படி சிறிய நிறுவனங்களை அழிப்பது கிடையாது. மக்களுக்கு தேவையான விஷயங்களை மட்டுமே வழங்குகிறோம் என்றார்

கூகுள் சர்ச் எஞ்சின் தேடுத்தளம் யாருக்கும் எதிராக செயல்படவில்லை. இது AI அதாவது செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படுகிறது. எல்லோருக்கும் சமமான வாய்ப்பை நாங்கள் வழங்குகிறோம். போட்டியை நாங்கள் எதிர்ப்பது இல்லை., என்று கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறினார்.

ஆப்பிள் ஸ்டோரில் 1.7 மில்லியன் செயலிகள் உள்ளது. எங்களுக்கு நிறைய போட்டிகள் உள்ளது . எங்கள் போட்டியாளர்களை நாங்கள் சூழ்ச்சி செய்து வீழ்த்தியது எல்லாம் இல்லை, என்று ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் கூக் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் தற்போது வேகமாக வளரும் நிறுவனம் டிக்டாக்தான். நாங்கள் இல்லை. நாங்கள் உலகின் பல சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்து அவர்களை வளர வைக்கிறோம். என்று மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்தார். இந்த விசாரணை 4 மணி நேரத்திற்கும் மேல் நடந்தது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!