
ஷா அலாம், ஜன 14- உழைப்புக்கும் இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் நன்னாளான பொங்கல் திருநாளை புதிய சூழ்நிலைக்கு ஏற்ப மகிழ்ச்சியோடும் அதே வேளையில் மிதமாகவும் கொண்டாடுவோம் என சிலாங்கூர் ஆட்சிக்கு குழு உறுப்பினர் வி.கணபதிராவ் வெளியிட்ட பொங்கல் வாழ்த்து செய்தியில் கேட்டுக்கொண்டார்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதுபோல நமது வாழ்க்கையில் சிறப்புக்களை பொங்கல் கொண்டுவரும் என நம்பிக்கையோடு வரவேற்போம் என அவர் தெரிவித்தார்.