Latestஇந்தியா

போர்க் குற்றவாளி என்பதை கோட்டாபய நிருபித்துவிட்டார் – அனந்தி கருத்து

கொழும்பு, ஜன 11- தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பற்றி இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச வெளியிட்ட கருத்து கண்டனத்திற்குரிய ஒன்று என இலங்கையின் வட மாகன முன்னாள் முதலமைச்சரும் ஈழத்தமிழர் சுயாட்சிக் கழக செயலாளருமான அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை பரப்பும் நோக்கில் கோட்டாபய இப்போது பிரபாகரன் பற்றி மோசமாக வருணித்துள்ளார். இதன்வழி தாம் போர்க்குற்றம் புரிந்துள்ளார் என்பதையும் அவர் நிருபித்துள்ளார்.

உண்மையில் பிரபாகரனை கோட்டாபய கொன்றிருந்தால் இந்திய அரசுக்கு அவர் ஏன் மரண சான்றிதழ் வழங்கவில்லை என்ற கேள்வியையும் அனந்தி முன்வைத்தார். அதோடு பிரபாகரனின் மரபணு பரிசோதனைக்கும் ஏன் அவர்கள் உடன்படவில்லை என்றும் பி.பி.சிக்கு வழங்கிய நேர்க்காணலில் அனந்தி வினவினார்.

இதனிடையே இலங்கை அதிபரின் அந்த பேச்சை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனும் சாடியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!