Latestமலேசியா

போர்ட்டிக்சன் கடல் நீர் பெருக்கு, கட்டுப்பாட்டுக்குள் வந்தது!

சிரம்பான், அக் 18 – போர்ட்டிக்சன் கடற்கரைப் பகுதிகளில் நேற்றிலிருந்து ஏற்பட்டிருந்த நீர் பெருக்கு, வெயிலைத் தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

இதனால் அங்கு வெள்ளப் பெருக்கு போன்ற சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை என போர்ட்டிக்சன் மாவட்ட பொது தற்காப்புப் படை அதிகாரி கேப்டன் முகமட் அஸ்ரி அபு ஹசான் (Mohamad Azri Abu Hassan) தெரிவித்தார்.

ஆயினும் கனமழை பெய்யத் தொடங்கினால் தாழ்வான இடங்களிலுள்ள சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கக்கூடிய வாய்ப்பிருப்பதாக அவர் கூறினார்.

இதற்கு முந்தைய மாதங்களில் இருந்ததை விட இம்முறை போர்ட்டிக்சன் கடற்கரை பகுதிகளில் நீர் பெருக்கு சற்று கூடுதலாகவே இருந்ததாக, கேப்டன் முகமட் அஸ்ரி குறிப்பிட்டார்.

ஆயினும் இன்று வெயிலடிக்கத் தொடங்கியதால் நிலைமை பின்னர் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. எனினும் எந்த சாத்தியத்தையும் எதிர்கொள்ள, தமது தரப்பு தயாராகவே இருப்பதாக அவர் மேலும் சொன்னார்.

இதனிடையே கடலில் நீர் பெருக்கு ஏற்பட்டதால், கடல் பகுதியில் எண்ணெய் கொட்டி மாசடைந்திருந்த பந்தாய் செர்மின் கடற்கரைப் பகுதியைச் சுத்தப்படுத்தும் பணிகள் எளிதானதாக கேப்டன் முகமட் அஸ்ரி கூறினார்.

கடந்த 12ஆம் தேதி நிகழ்ந்த சம்பவத்தில் கப்பல் இயந்திரத்திலிருந்து எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு, அது கடல் நீரில் கலந்ததால், பந்தாய் செர்மின் கடற்கரையின் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை மாசு ஏற்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!