Latestமலேசியாவிளையாட்டு
போலிங் வீராங்கனை – ஷாலின் சுல்கிப்ளி ஓய்வுப் பெற்றார்

கோலாலம்பூர், ஜன 6- மலேசியாவின் முன்னணி போலீங் வீரங்கனையான ஷாலின் சுல்கிப்ளி (Shali Zulkifli) இனி அனைத்துலக போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
41 வயதுடைய ஷாலின் சுல்கிப்ளி அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளில் 74 பதக்கங்களை வென்றுள்ளார். போலீங் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறும் தமது முடிவை கடித வாயிலாக தேசிய போலீங் பயிற்சியாளர் ஹோலேவே சியாவிடம் (Holloway Chah) ஷாலின் சுல்கிப்ளி தெரிவித்தார்.