Latestமலேசியா

மலேசிய கோல்ஃப் அணிக்குப் பாராட்டு விழா

கோலாலம்பூர், டிசம்பர் 14 – தாய்லாந்து, புக்கெட்டில் நடைபெற்ற உலக அமெச்சூர் கோல்ப் சாம்பியன்ஷிப் 2023 எனும் போட்டியில் முதல் நிலையில் வெற்றியை தன் வசமாக்கிய ஐந்து போட்டியாளர்களைப் பாராட்டும் வகையில் அண்மையில் விருந்து நிகழ்வு ஒன்று டெல்டா வேர்ல்ட் ஏற்பாட்டில் தலைநகரில் நடைபெற்றது.

மூன்றாவது முறையாக இவ்வெற்றியை இக்குழு தன் வசமாக்கிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் தொடர் வெற்றியைப் பாராட்டும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ, பெரோடுவா மலேசியாவின் தலைமை இயக்க அதிகாரி துவான் ஹாஜி ஜே ரோஸ்மான் ஜாபர் மற்றும் இந்நிகழ்வின் ஏற்பாட்டாளரும் டெல்டா வேர்ல்ட் எஸ்.டி.என் பி.எச்.டி நிர்வாக இயக்குனருமான ஐசக் சாமிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர்.

33 நாடுகளுக்கிடையே நடைபெற்ற கோல்ஃப் போட்டியில் வென்ற மலேசிய தேசிய அணிக்குப் பாராட்டு தெரிவித்ததோடு, அந்த அணி போட்டியில் கலந்து கொள்ள நீதி உதவி வழங்கிய பெரோடுவா குழுவினருக்கும் நன்றி நவில்தார், அமைச்சர் ஹன்னா இயோ.

மேலும், அடுத்த ஆண்டில் விளையாட்டு துறையில் முதியோர்கள் குறிப்பாக பி.40 சேர்ந்தவர்களை இலக்காக கொண்டிருப்பதாகவும், கோல்ஃப் விளையாட்டு இளையோருக்கு மட்டுமல்லது முதியோருக்கும் ஏதுவாக இருக்கும் என்று நிகழ்வில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!