Latestமலேசியா

போலீசை அழைக்கப் போவதாக சபாநாயகர் மிரட்டுவதா? – லிம் குவான் எங்

கோலாலம்பூர். நவ 12- நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறும் தமது உத்தரவை கெப்போங் எம்.பி லிம் லிப் எங் ( Lim Lip Eng) மறுத்தால் போலீசை அழைக்கப்போவதாக சபாநாயகர் அஸார் ஹருன் விடுத்த மிரட்டல் தமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக டி.ஏ.பியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.

லிப் எங்கை வெளியேற்றியது மற்றும் அவருக்கு விதிக்கப்பட்ட 5 நாள் இடை நீக்கம் செய்வதற்கு துணை பாநாயகர் அஸாலினா ஒத்மான் சைட் எடுத்த முடிவு விவேகமற்றது என்பதோடு கடுமையானதாக உள்ளது. இந்த விவகாரத்தை அவர் வேறு விதமாக கையாண்டிருக்கலாம் என லிம் குவான் எங் சுட்டிக்காட்டினார்.
சுகாதாரத்துறையின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிசாம் மரணத்திற்கு அஞ்சுவதால் கோவிட் தொற்றுக்கு உள்ளான சபா மாநிலத்திற்கு வருகை புரியவில்லை என சரவா GPS கூட்டணியைச் சேர்ந்த பிந்துலு நாடாளுமன்ற உறுப்பினர் தியோங் கிங் சிங் ( Tiong King Sing ) கூறிய வார்த்தையை மீட்டுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளத் தவறியதற்காக அஷாலினாவை லிப் எங் குறைகூறியிருந்தார்.

அஸாரின் நடவடிக்கை நாடாளுமன்றத்தின் மாண்புக்கு கறைபடிந்துவிட்டதாக லிம் குவான் எங் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தாம் தெரிவித்த கருத்தை பிந்துலு எம்.பி தியோங் மீட்டுக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்து ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர். எஸ்.என் ராயர் தீர்மானத்தை முன்மொழிவார் என லிம் குவான் எங் தெரிவித்தார்.

அமைச்சர் நிலை பதவியில் சீனாவுக்கான சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் தியோங் அரசாங்க பணியாளர் நோர் ஹிஷாம் குறித்து நாடாளுமன்றத்தில் தெரிவித்த வார்த்தைக்கு அரசாங்கம் கண்டனம் தெரிவிக்கும் என்றும் நாங்கள் நம்புகிறோம் என லிம் குவான் எங் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!