Latestஉலகம்

‘போலீஸ் திருடன்’ விளையாட்டு;நிஜ துப்பாக்கியால் தம்பி சுட்டுக் கொலை

பிலிடேப்பியா, ஜூலை 15 – அமெரிக்கா பென்சில்வேனியாவில் அண்ணன் தம்பி இருவரும் ‘போலீஸ் திருடன்’ விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கும் போது தவறுதலாக அண்ணனால் துப்பாக்கியல் சுடப்பட்டு தம்பி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த புதன் கிழமை நிகழ்ந்த இச்சம்பவத்தில் ‘போலீஸ் திருடன்’ விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்த 13 வயது அண்ணன் தனது 9 வயது தம்பியை தவறுதாக சுட்டதில் தம்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலிசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் அச்சிறுவனின் தந்தை பாதுகாப்புக்காக வீட்டில் வைத்திருந்த துப்பாக்கியை வைத்துக் கொண்டு அவர்கள் இவ்விளையாட்டை விளையாடியதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!