Latestமலேசியா

மகாதீரின் புதிய கட்சியின் பெயர் ‘Pejuang’

கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 – முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் புதிய கட்சியின் பெயர் பெஜுவாங் என பெயரிடப்பட்டுள்ளது. பெஜுவாங் என்றால் போராளி என அர்த்தப்படும்.
5 நாட்களுக்கு முன்பதாக தான் ஒரு புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் மகாதீர் தெரிவித்திருந்தார். ஆனால் அச்சமயத்தில் கட்சிக்கான பெயர் இன்னமும் வைக்கப்படவில்லை எனவும் விரைவில் அறிவிக்கப்படும் என கூறியிருந்தார். இந்நிலையில், இன்று தனது ப்லோக் பதிவில் கவிதை ஒன்றை எழுதியிருந்த துன் மகாதீர் அதில் தனது கட்சியின் பெயரை அறிவித்தார்.
அக்கவிதையில் நமது தன்மானம் காக்கப்பட வேண்டும் என்றால், நமது உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்றால் எங்கள் கட்சியை தேர்ந்தெடுங்கள், பெஜுவாங்கை தேர்ந்தெடுங்கள் என மகாதீர் எழுதியிருந்தார்.
அதே சமயத்தில் பெஜூவாங் என்பது அப்புதிய கட்சியின் முழு பெயரில் ஒரு பகுதிதன். நீண்ட பெயரும் ஒன்று இருப்பதாகவும், அதிகாரப்பூர்வமாக கட்சி பதிவு பெற்றப்பிறகு அந்த நீண்ட பெயர் அறிவிக்கப்படும் என மகாதீருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியுள்ளன. கட்சியின் சட்டவிதிகள் இப்பொழுது வகுக்கப்பட்டு வருவதாகவும், கூடிய விரைவில் சங்கங்களின் பதிவிலாகாவிடம் அனைத்தும் சமர்ப்பிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்சியை பதிவதற்கான நடவடிக்கை கால அவகாசம் தேவைப்படுவதால், சிலிம் இடைத்தேர்தலில் பெஜுவாங் கட்சியியை பிரதிநிதித்து யாரும் போட்டியிட முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!