Latestமலேசியா

அவதூறு வழக்கு ஸாகிர் நாயக்கிற்கு 1.52 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்குவீர் – டாக்டர் ராமசாமிக்கு உயர்நிதிமன்றம் உத்தரவு

கோலாலம்பூர், நவ 2 – 2017 ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கிடையே சர்ச்சைக்குரிய இஸ்லாமிய சமய போதகர் டாக்டர் ஸாகிர் நாயக்கிற்கு அவதூறு ஏற்படுத்தியதன் தொடர்பில் அவருக்கு இழப்பீடாக 1.52 மில்லியன் ரிங்கிட் வழங்கும்படி பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சரான பேராசிரியர் டாக்டர் பி. ராமசாமிக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்த அவதூறு வழக்கில் பிரதிவாதியான ராமசாமி அவதூறு புரிந்துள்ளார் என்பதை நீதிமன்றம் ஆதாரப்பூர்வமாக கண்டறிந்துள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி ஹயாத்துல் அக்மல் அப்துல் அஸிஸ் தீர்ப்பளித்தார்.

அவரை அவதூறாகப் பேசியதற்காக டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு 1.52 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு தொகையை 30 நாட்களுக்குள் ராமசாமி வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே நீதிமன்றத்தின் இந்த முடிவுக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்போவதாக நீதிமன்றத்திற்கு வெளியே ராமசாமி தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் தமக்கு எதிராக ராமசாமி 5 அறிக்கைகளை வெளியிட்டதாகவும் அவற்றில் இரண்டு அவதூறு அம்சங்களை கொண்டிருந்ததன் தொடர்பில் ராமசாமிக்கு எதிராக ஸாகிர் நாயக் வழக்கு தொடுத்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!