Latestமலேசியா

மகாத்மா காந்தியின் நினைவு நாணயத்தை பிரிட்டன் வெளியிடுகிறது

லண்டன் , ஆக 2- இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களில் ஒருவரான அண்ணல் மகாத்மா காந்தியை நினைவு கூறும் வகையில் நாணயம் ஒன்றை வெளியிடுவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இரத்தம் சிந்தாமல் அகிம்சையின் மூலம் இந்தியாவுக்கு பாடுபட்ட தலைவராக மகாத்மா காந்தி உலகம் முழுவதிலும் போற்றப்படுகிறார்.
இன்று வரை அவர் சிறந்த முன் உதாரணமான தன்னலம் கருதாத ஒப்பற்ற தலைவராக திகழ்ந்தவரும் மகாத்மா காந்தி பல நாடுகளைச் சேர்ந்த மக்களின் மனதில் வாழ்ந்து வருகிறார். வன்முறையின்றி, இரத்தம் சிந்தாமல் அகிம்சை மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் சுதந்திர போராட்டத்தில் வெற்றி பெற முடியும் என்ற தத்துவத்தை போதித்த மாபெரும் மனிதராக காந்தி இருந்து வருகிறார்.
காந்தியின் நினைவாக நாணயம் ஒன்று வெளியிடப்படும் என பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ரிஷி சுனிக் கூறினார். இது தொடர்பான ஆலோசனையை ராயல் மின்ட் ஆலோசனை குழு ஆராய்ந்து வருகிறது. இந்த ஆலோசனையை அந்த ஆலோசனை பரிசீலித்து வருவதாகவும் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!