
புதுடில்லி, ஜன 5 – இந்தியா, பிகாரில் (Bihar) வீட்டுப் பிரச்சனையால் மனைவி அடிக்கடி சண்டையிட அந்த தொல்லையிலிருந்து விடுபட, ஆடவர் ஒருவர் தான் இறந்து விட்டதாக நாடகமாடியிருக்கிறார்.
டிசம்பர் 30 –ஆம் தேதி , கய்மூர் (Kaimur) பகுதியைச் சேர்ந்த 37 வயது ரடீப் குமார் ராம் (radeep Kumar Ram ), காணாமல் போயிருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டிருந்தது.
அவர் காணாமல் போன தினத்தன்று, அந்த ஆடவரின் படுக்கையறையின் தரையிலும் கட்டிலிலும் ரத்தம் படிந்திருந்தது. அதையடுத்து அந்த ஆடவரின் உடலைத் தேடும் நடவடிக்கையை போலீஸ் மேற்கொண்டிருந்தனர்.
எனினும், சில தினங்கள் கழித்து, கடந்த வெள்ளிக்கிழமை உத்தர பிரதேசத்திலுள்ள கசிபூர் (Ghazipur) பகுதியில் அந்த ஆடவர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டார்.