
சுங்கைப் பட்டாணி, ஆகஸ்ட் 12 – சுங்கை பட்டாணி, அமான் ஜெயா, தாமான் கெலிசா ரியாவில் திங்கட்கிழமை கொலை இறந்து கிடந்த பெண்ணை கொலை செய்ததாக நம்பப்படும் அப்பெண்ணின் கணவர் புக்கிட் பிந்தாங் ஜாலான் லென்சோங் தீமோர் அருகே உள்ள சாலை விளம்பர பலகையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணபட்டார்.
62 வயதான டான் கோக் ஜோய் எனும் அந்ச்த ஆடவரின் உடலை பொதுமக்கள் நேற்று காலை 7.40 மணியளவில் கண்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட 61 வயது குவேக் சோ ஹோங்கின் விசாரணையில் முக்கிய குற்றவாளியாக டான் கோக் தேடப்பட்டு வந்ததாக குவாளா மூடா மாவட்ட போலிஸ் தலைவர் அட்ஸ்லி அபு ஷா தெரிவித்தார்.
அந்த ஆடவர் தூக்கில் தொங்கிய இடத்திலிருந்து 50 மீட்டர் தூரத்தில், அந்த ஆடவனுக்கு சொந்தமான கார் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட பெண் கழுத்தில் வெட்டுக் காயத்துடன் இரத்த வெள்ளத்தில் வீட்டில் காணப்பட்டுள்ளார். போலிசார் இவ்விரு சம்பவத்தையும் விசாரித்து வருகின்றனர்.