Latestமலேசியா

மருத்துவமனையில் மகாதீர் அனுமதிக்கப்பட்டரா? – அது பொய்யான தகவல் குடும்பத்தினர் விளக்கம்

கோலாலம்பூர். ஜன 23- டாக்டர் மகாதீர் மருத்துவமனையில் உடல் நலமில்லாமல் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுவாசிப்பதில் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் வாட்ஸ்அப் உட்பட சமுக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.

இந்த தகவலில் உண்மையில்லை. இது முழுக்க முழுக்க பொய்யான செய்தி என மகாதீரின் புதல்வி மரினா மகாதீர் தெரிவித்தார். 95 வயதுடைய தமது தந்தை மருத்துவமனயில் அனுமதிக்கப்படவில்லை. அவர் உடல் நலமின்றி இருப்பதாக வெளியான தகவலும் உண்மையில்லை என மரினா கூறினார்.

மகாதீர் நல்ல ஆரோக்கியத்துடன் வீட்டில் இருக்கிறார் என அவரது உதவியாளர் அடாம் முக்ரிஸ் முஹாயெடின் டுவிட் செய்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!