Latestசினிமா

மறைந்த நடிகர் விவேக்கின் கடைசி நிகழ்ச்சி – ஓடிடியில் வெளியாகிறது

சென்னை, ஆக 12 – LOL – Last One Laughing ‘எங்க சிரி பார்ப்போம்’ என்ற இந்த நகைச்சுவைத் தொடர் அமேசான் பிரைமில் வெளியாகி வெற்றிபெற்றது. இதன் தமிழ்ப் பதிப்பில் நடிகர் விவேக், நடிகர் சிவாவுடன் இணைந்து தொகுப்பாளராகவும், நிகழ்ச்சியின் நடுநிலையாளாராகவும் பங்காற்றியுள்ளார்.
பத்து காமெடியன்கள் ஓர் அறையில் தங்க வைக்கப்படுவர். அந்த பத்து பேரும் ஒருவரை ஒருவர் சிரிக்க வைக்கவேண்டும். இதில் கடைசியாக யார் யார் சிரிக்கிறார்களோ, அவர்களே வெற்றியாளர்கள். வெற்றி பெறுபவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும். இதுவே இந்த நிகழ்ச்சியாகும்.
மொத்தம் ஆறு பாகங்கள் கொண்ட இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக காமெடி நடிகர்கள் சதீஷ், பிரேம்ஜி, பவர்ஸ்டார் சீனிவாசன், ஆர்த்தி, குக் வித் கோமாளி புகழ், ஆர்ஜே விக்னேஷ்காந்த், அபிஷேக் குமார், மாயா கிருஷ்ணன், ஷியாமா ஹரிணி, பேகி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சி, எதிர்வரும் 27-ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விவேக்குடன் ஒன்றாக பணியாற்றிய அனுபவம் பற்றி பேசியுள்ள நடிகர் சிவா, “எனக்கு பிடித்த கலைஞர் விவேக் சார். அவருடன் இணைந்து நான் கடைசியாக பணியாற்றியது இந்தப் படப்பிடிப்பின்போதுதான் என்பதால் எல்ஓஎல் நிகழ்ச்சி என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. தனது பன்முகத்தன்மையால் விவேக் சார் ஏற்கெனவே இந்த நிகழ்ச்சியை ஒரு சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக கூடுதல் சிரமம் எடுத்து பணிபுரிந்தார். அவரின் உழைப்பால் இந்த நிகழ்ச்சி சிறப்பாக வந்துள்ளது. அவருடன் இணைந்து நிகழ்ச்சியை நடத்தியது எனக்கு ஓர் அற்புதமான தருணமாக அமைந்தது” என்று நெகிழ்ந்து பேசியிருக்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!