Latestமலேசியா

மலாக்கா மாநிலத்தைக் கடக்கக் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறதா? மாநில அரசாங்கம் மறுப்பு!

மலாக்கா, அக் 20 – இன்று நள்ளிரவு தொடங்கி, மலாக்கா மாநிலத்தைக் கடக்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகப் பரவியிருக்கும் தகவலை மலாக்கா மாநில முதலமைச்சர் அலுவலகம் மறுத்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரவியிருக்கும் அத்தகவல் போலியானது என்றும் உண்மைக்குப் புறம்பானது என்றும் முதலமைச்சர் அலுவலகம் அறிக்கை வழி உறுதிப்படுத்தியது.

மாநிலத்தைக் கடக்கத் தடை விதிக்கும் எந்த உத்தரவையும் மாநில அரசாங்கம் பிறப்பிக்கவில்லை. இதுபோன்ற வதந்திகளைப் பரப்பவோ, பகிரவோ வேண்டாம் என முதலமைச்சர் அலுவலகம், எல்லா தரப்பினருக்கும் ஆலோசனைக் கூறியது.

நாடு கோவிட்-19 நோய் மருட்டலை எதிர்கொண்டு வரும் சூழ்நிலையில் இத்தகைய வதந்திகள், மக்களிடையே தேவையற்ற பதற்றத்தையே உருவாக்கும் என அது மேலும் தெரிவித்தது.

நாட்டில் குறிப்பாக மலாக்காவில் கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்பான ஆகக் கடைசி நிலவரங்களை அறிந்து கொள்ள விரும்பும் பொது மக்கள், தேசிய பாதுகாப்பு மன்றம் அல்லது மாநில சுகாதாரத் துறை போன்ற அதிகாரத்துவ தரப்பினரை மட்டுமே நாடும்படி முதலமைச்சர் அலுவலகம் கேட்டுக் கொண்டது.

மலாக்காவில் இன்று நள்ளிரவு தொடங்கி, நவம்பர் நான்காம் தேதி வரை மாநிலத்தைக் கடக்கக் கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக முன்னதாக வாட்ஸ்ஆப் (WhatsApp) மூலம் செய்திகள் பரவியிருந்தன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!