Latestஉலகம்மலேசியா

மலேசியா – சிங்கப்பூர் எல்லை ஆகஸ்டு 10ஆம் தேதி திறக்கப்படும்

ஜோகூர் பாரு, ஜூலை 14 – 5 மாதங்களுக்குப் பிறகு மலேசியாவும் சிங்கப்பூரும் ஆகஸ்டு 10ஆம் தேதி தங்களது எல்லையை திறக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு தரப்பினரைக் கொண்ட பயணிகள் பயணம் செய்யும் வகையில் சில நிபந்தளைகளோடு எல்லைகள் திறக்கப்படவுள்ளது.

RGL எனப்படும் இருவழி பசுமை தடம் மற்றும் PCA எனப்படும் அவ்வப்போது பயண ஏற்பாட்டுக்கான வழிதடத்தை திறப்பதற்கு இரு நாடுகளின் அரசாங்கங்களும் இணக்கம் கண்டுள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சர் ஹிசாமுடின் துன் உசேய்ன் மற்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்குமிடையே எல்லையைக் கடக்கும் வெவ்வேறு தரப்பினரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த இரண்டு தடங்கள் திறக்கும் திட்டங்களும் இருக்கும் என கூறப்பட்டது.

இரு நாடுகளுக்கிடையிலான அத்தியாவசிய துறைகள் மற்றும் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளுக்கான போக்குவரத்து தடத்திற்கான எல்லைகைளை திறக்கும் ஏற்பாடாக RGL வழித்தடம் அமையும். அதே வேளையில் பயணம் செய்வதற்கு தகுதியைக் கொண்டவர்கள் இரு நாடுகளும் ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட கோவிட்-19 தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கை மற்றும் பொது சுகாதார நடவடிக்கைளை பின்பற்ற வேண்டும். இவற்றில் PCR எச்சில் பரிசோதனையை மேற்கொள்வதும் அடங்கும். பயணம் செய்பவர்கள் தங்களது பயணத்திற்கான ஏற்பாடுகள் குறித்த அட்டவணை மற்றும் வருகையின்போது கட்டுப்படுத்தப்பட்ட ஏற்பாடுகள் தொடர்பான விவரங்களை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரிவிக்க வேண்டும்.

இதனிடையே நீண்ட கால குடிநுழைவு பாஸ்களை கொண்டுள்ள சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் குடியிருப்பவர்கள் ஒன்று மற்றொன்று நாட்டில் வேலை செய்வதற்கு செல்ல முடியும். எடுத்துக் காட்டாக சிங்கப்பூரிலோ அல்லது மலேசியாவிலோ தங்கி வேலை செய்யும் மலேசியரோ அல்லது சிங்கப்பூரியரோகுறிப்பிட்ட நாட்டில் குறைந்தது மூன்று மாத காலம் வேலை செய்துவிட்டு குறுகிய கால விடுமுறையில் அவர்கள் தங்களது நாடுகளுக்கு செல்ல முடியும். அதன் பிறகு மீண்டும் வேலை செய்யும் நாட்டிற்கு செல்லும்போது மீண்டும் தொடர்ந்து மூன்று மாதங்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுகிறது.

எல்லைகள் திறக்கப்பட்டு பயணத்தை மேற்கொள்வது குறித்த விண்ணப்ப நடைமுறைகள், சுகாதார நெறிமுறைகள் மற்றும் இதர விதிமுறைகள் குறித்து ஆகஸ்ட் 10ஆம் திகதிக்கு 10 நாட்களுக்கு முன்பதாக அறிவிக்கப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!