
கோலாலம்பூர், பிப் 24 – தமது ஆன்மீக பணிகளுக்காக நன்கு அறிமுகமானவரும் ஓவியம் உட்பட பலதுறைகளிலும் சிறந்து விளங்கியவரான கலைஞர் ஜெகநாதன் ராமச்சந்திரன் காலமானார். 59 வயதான அவர் காலமான செய்தி அவரது முகநூலில் இன்று அறிவிக்கப்பட்டது. சிலாங்கூரில் பிறந்து வளர்ந்தவரான ஜெகநாதன் தமது ஓவியக் கலையின் மூலம் ஆன்மீகத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.
1980 ஆம் ஆண்டு முதல் ஓவியக் கலையில் தீவிர ஈடுபாடு காட்டி வந்த ஜெகநாதன் இந்து சமய வேதங்களை தமது ஓவியக் கலையில் முன்னிலைப்படுத்தி வந்தார்.
1982 ஆம் ஆண்டு இந்தியாவில் சென்னையில் பாரம்பரிய இந்திய ஓவியங்கள், சிற்ப கலை, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு போன்ற துறைகளில் பயிற்சியும் பெற்ற அவர் கார்நாடாக இசைத்துறையிலும் பயிற்சி பெற்றுள்ளார்.