Latestமலேசியா

மலேசிய தொழிலாளர்களில் 50 விழுக்காட்டினர் மட்டுமே சிங்கப்பூருக்கு வேலைக்கு திரும்பியுள்ளனர்

கோலாலம்பூர், ஜன 25- 5 மாதங்களுக்கு முன் எல்லை கடந்த பயணங்கள் மீண்டும் தொடங்கிய போதிலும் மலேசிய தொழிலாளர்களில் 50 விழுக்காட்டினர் மட்டுமே சிங்கப்பூருக்கு வேலைக்கு திரும்பியுள்ளனர். மலேசியாவிலிருந்து வரும் தொழிலாளர்களை தாங்கள் அதிகமாக நம்பியிருப்பதாக தொழில்துறை வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

விரிவுபடுத்தும் பணிகள், உணவு மற்றும் பானங்கள் சேவைத்துறையில் இன்னமும் தொழிலாளர் பற்றாக்குறை இருந்து வருகிறது. உண்மையில் 50 விழுக்காடு தொழிலாளர்கள் மட்டுமே சிங்கப்பூருக்கு வேலைக்கு திரும்பியுள்ளனர் . பெரும்பாலோர் சீனப் புத்தாண்டுக்குப் பிறகுதான் சிங்கப்பூருக்கு வேலைக்கு திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளதாக சீரமைப்பு மற்றும் புதுப்பிக்கும் வேலைகளுக்கான குத்தகையாளர்கள் மற்றும் கட்டுமான பொருள்கள் வினியோகிப்பாளர் சங்கத்தின் தலைவரான Sky Tan கூறினார்.

சிங்கப்பூரில் கோவிட் பரிசோதனை மற்றும் அங்கு தனித்திருப்பதற்கான வசதிக்கு 2,215 சிங்கப்பூர் டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் .விண்ணப்பத்தின்போதே இந்த கட்டணத்தை செலுத்திவிட வேண்டும். இந்த கட்டணம் திரும்ப வழங்கப்படாது.

புதுப்பிக்கும் வேலைகளை செய்வதில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களில் 80 விழுக்காட்டினர் தொழில் திறன் ஆற்றலைக் கொண்ட மலேசிய தொழிலாளர்களாவர். கடந்த ஆண்டிலிருந்து சில நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதாகவும் ஸ்கை டான் கூறினார். கோவிட் தொற்று பரவுவதற்கு முன் இந்த துறையைச் சேர்ந்த பெரும்பாலான தொழிலாளர்கள் தினசரி சிங்கப்பூருக்கு வேலைக்காக பயணம் செய்து வந்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!