Latestமலேசியா

புதிய வீடமைப்பு மாதிரி ; வீடமைப்பு, ஊராட்சி அமைச்சு அறிமுகம் செய்யவுள்ளது

ஹாங்காங், மார்ச் 8 – வீடமைப்பு ஊராட்சி அமைச்சு, PRR எனும் புதிய மக்கள் வீடமைபுத் திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக, அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

PRR வீடமைப்பு திட்டம், நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட, நிலையான, சுமூகமான சூழலை கொண்டிருக்கும்.

அதோடு, தரமான வணிக நம்பகத்தன்மை, பசுமையான இடங்கள், சமூக மையம் ஆகியவற்றையும் அது உள்ளடக்கி இருக்குமென அமைச்சர் சொன்னார்.

ஒவ்வொரு PRR யூனிட்டின் கட்டுமானச் செலவும் மூன்று லட்சம் ரிங்கிட்டாக உயர்த்தப்படும் எனவும், குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு தரமான வீடுகளை கட்டித் தருவதே அதன் நோக்கம் எனவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

எனினும், புதிய PRR திட்டன் கீழ், அந்த மூன்று லட்சம் மதிப்பிலான வீடுகள் வெறும் அறுபதாயிரம் ரிங்கிட்டுக்கு விற்கப்படும். அதில் சுமார் பத்தாயிரம் முதல் 15 ஆயிரம் ரிங்கிட் வரையில் பராமரிப்பு செலவினங்களுக்கு ஒதுக்கப்படும்.

அத்திட்டத்தின் கீழ் வீடுகளை வாங்குபவர்கள், பத்தாண்டுகளுக்கு அதனை விற்க முடியாது. அந்த வீடுகளை வாங்க தகுதி பெறாதவர்கள், அதனை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க அந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!