Latestமலேசியா

மலேசிய மெளக்லியின் குடும்பத்துக்கு அரசாங்கம் உதவும்!

கோலத் திரங்காணு, செப் 16 – மடிந்த தனது எருமைகளைப் புதைப்பதற்கு ஆகும் செலவுக்காக, அரசாங்கத் தரப்பில் இருந்து நிதியுதவி வழங்க முன்வந்திருப்பது தமக்கு ஆறுதலைத் தந்திருப்பதாக ‘மலேசிய மெளக்லி’ எனும் சிறுவனுடைய தந்தை காமிஸ் ஜூசோ (Khamis Jusoh) கூறியுள்ளார்.

தமது எருமைகளைப் புதைப்பதற்கான இயந்திரங்களை வாடகைக்கு எடுக்க, தமக்கு ஒரு நாளைக்கு 300 ரிங்கிட்டுக்கு மேல் தேவைப் படுவதாக 64 வயது காமிஸ் கூறினார்.

தம்மிடம் உள்ள எருதுகளில் 50, நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டன. தற்போது அவற்றைப் புதைப்பதற்கு, தமது சேமிப்புப் பணத்தைத் தாம் பயன்படுத்தி வருவதாக அந்த முதியவர் சொன்னார்.

பண நெருக்கடியில் இருந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த போது, இன்று அறிவியல்-தொழில்நுட்ப-புத்தாக்கத் துறை துணை அமைச்சர் அகமட் அம்சாட் ஹஷீம் (Ahmad Amzad Hashim) தமக்கு நன்கொடை வழங்கி பெரும் உதவி புரிந்திருப்பதாக காமிஸ் கூறினார்.

இன்னும் அதிகமானோர் தமக்கு பண உதவி வழங்க முன்வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே மாடுகளை இழந்திருப்பதோடு, பெரும் நிதிச் சுமையையும் எதிர்நோக்கியிருக்கும் மலேசிய மெளக்லி எனும் 15 வயது முகமட் ஷூகோர் காமிசின் குடும்பத்துக்கு, அரசாங்கத்திடம் இருந்து மேலும் உதவிகளைப் பெற்றுத் தர, தாம் உரிய முயற்சிகளை எடுத்திருப்பதாக கோலத் திரங்காணு நாடாளுமன்ற உறுப்பினருமான அகமட் அம்சாட் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!