Latestஇந்தியாஉலகம்

மாப்பிள்ளை பிடிக்கவில்லை; விளம்பர பலகையில் ஏறி மணப்பெண் ஆர்ப்பாட்டம்

புதுடில்லி, நவ 12- தாயார் பார்த்த மாப்பிள்ளை பிடிக்காததால் திருமணம் செய்ய மறுத்த வயது குறைந்த பெண் ஒருவர் சாலையில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகையின் மேலே ஏறி தமது எதிர்ப்பைத் தெரிவித்தார்.

சாலையில் பரபரப்பாக வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்தாலும் அது குறித்து எந்தவொரு அச்சமும் இன்றி இந்த இளம் பெண் விளம்பரப் பலகையின் மேலே அமர்ந்துகொண்டு கைத்தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் காணொளி சமுக வலைத்தளத்தில் வைரலானது.

மத்திய பிரதேசத்தில் பரபரப்பான பர்டேசிப்புரா நகரில் நிகழ்ந்த இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு உடனே அங்கு விரைந்த போலீசார் எவ்வளவோ வற்புறுத்தியும் அப்பெண் கீழே இறங்க மறுத்தார். இறுதியில் அப்பெண்ணின் காதலர் வந்து பேச்சு நடத்திய பின்னர் இந்த பெண் கீழே இறங்கினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!