Latestமலேசியா

மாமன்னரின் முடிவு விவேகனமானது டத்தோஸ்ரீ அன்வார்

கோலாலம்பூர், அக் 26- அவசரகாலப் பிரகடனத்திற்காக அமைச்சரவை முன்மொழிந்த பரிந்துரையை நிராகரித்த மாமன்னரின் முடிவு விவேகமானது என எதிர்க்கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார். மக்களின் கவலைகைள் மற்றும் அவர்களின் குரலை புரிந்துகொள்ளும் வகையில் கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் உணர்வுக்கு ஏற்ப மாமன்னரின் முடிவு அமைந்திருப்பதாக பி.கே.ஆர் கட்சியின் தலைவருமான அன்வார் வருணித்தார்.

கோவிட் 19 – தொற்று நெருக்கடி , வேலையில்லாத பிரச்சனை, வறுமை நிலை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு உறுதிப்படுத்தக்கூடிய திட்டங்களில் தமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்துவார்கள் என்பதோடு தேவையற்ற அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிராக மாமன்னர் தெரிவித்துள்ள ஆலோசனைகளையும் பி.கே.ஆர் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என அவர் சொன்னார்.

அரசியலமைச்ச சட்டம் மற்றும் பொறுப்புணர்வுக்கு ஏற்ப ஊழல் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக குரல் எழுப்புவதில் அரசியல்வாதிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்புணர்வுடனும் அரசியலமைப்பு சட்டத்திற்கு ஏற்பவும் செயல்பட வேண்டும் என்றும் அன்வார் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!