Latestமலேசியா

மார்ச் முதல் 30,000 த்திற்கும் மேலான நிறுவனங்கள் மூடப்பட்டன

கோலாலம்பூர், நவ 12- கோவிட் -19 பெருந்தொற்று தொடங்கியது முதல் செப்டம்பர்வரை நாட்டில் 30,000த்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டன. ஜூன் மாதம் பொருளாதாரத் துறைகள் மீண்டும் கட்டம் கட்மாக புத்துயிரூட்டும் நடவடிக்கை தொடங்கப்பட்ட போதிலும் இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை செயல்படவில்லை.

ஆகஸ்டு மாதம் மட்டும் அதிகமான அதாவது 17,800 நிறுவனங்கள் மூடப்பட்டதாக தொழில்முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் வான் ஜூனைடி துவாங்கு ஜபார் கூறினார். மார்ச் 18 ஆம் தேதி முதல் ஜூன் 9ஆம் தேதிவரை நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை தொடக்கக் கட்டமாக அல்படுத்தப்பட்டபோது 9,675 நிறுவனங்கள் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து மீட்சிக் காலத்தில் மேலும் 22,794 நிறுவனங்கள் மூடப்பட்டன.

மூடப்பட்ட நிறுவனங்களில் 70 விழுக்காட்டிற்கும் மேற்பட்டவை சிறிய தொழில்துறை நிறுவனங்கள் என வான் ஜூனைடி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!