Latestஉலகம்

மியன்மாரில் போலீசுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைகலப்பு ; ஐவர் காயம்

யங்கோன், பிப் 22 – மியன்மாரில் ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்து தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று Mandlay ( மென்ட்லே) துறைமுகப் பகுதியில் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது போலீசார் ரப்பர் தோட்டா தாக்குதலை நடத்தினர். அந்த மோதலின்போது ஆர்ப்பாட்டக்கார்ர்களில் ஐவர் காயம் அடைந்தனர்.

பிப்ரவரி 1ஆம் தேதி மியன்மார் மக்கள் தலைவர் Aung San Suu Kyi மற்றும் மேலும் பல அரசியல் தலைவர்கள் கைது செய்ய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டது முதல் ஆளும் ராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிராக மியன்மாரின் முக்கிய நகரங்களில் மக்கள் தொடர்ந்து அமைதி ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனிடையே ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டுக்கு பலியான இளம்பெண்ணின் இறுதிச் சடங்கு நேற்று யங்கோனில் நடைபெற்றபோது பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டு தங்களது சோகத்தை பகிர்ந்து கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!