
கோலாலம்பூர், பிப் 24 – நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றிருந்தும் ஆவணமற்ற 1,000த்திற்கும் மேற்பட்ட மியன்மார் குடியேறிகளை நாட்டிலிருந்து வெளியேற்றிய நடவடிக்கையை மேற்கொண்ட குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குனரை Human Rights Watch அமைப்பு கடுமையாக சாடியது.
குடிநுழைவுத்துறையின் தலைமை இயக்குனர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என Human Rights Watch மனித உரிமை கண்காணிப்பு அமைப்பின் ஆசியாவுக்கான துணை இயக்குனர் Robertson கோரிக்கை விடுத்தார். குடிநுழைவுத்துறையின் நடவடிக்கை கடுமையானது, மூர்க்கத்தனமானது என்பதோடு மனித உரிமை மீறிய செயலாகும் என Robertson வர்ணித்தார்.