Latestமலேசியா

காப்பாரில் விமானம் விபத்துக்கு உள்ளாகுவதற்கு முன் வானத்திலேயே உடைந்தது

கோலாலம்பூர், மார்ச் 13 – பிப்ரவரி 16ஆம் தேதியன்று காப்பாரிலுள்ள செம்பனை தோட்டத்தில் இருவர் உயிரிழந்து, விபத்துக்குள்ளான The Blackshape BK 160 TR விமானம் வான் பகுதியிலேயே உடைந்திருக்கலாம் என விமான விபத்து விசாரணைப் பிரிவு (AAIB) இன்று தெரிவித்துள்ளது.

அந்தப் பகுதியைச் சுற்றி காணப்பட்ட குப்பைகளின் விநியோகத்தை பார்க்கையில் , செம்பனை தோட்டத்தில் தரையிறங்குவதற்கு முன்பு, விமான கட்டமைப்பின் பெரிய பாகங்கள் வான் பகுதியிலேயே உடைந்திருக்கலாம் தெரியவருகிறது.

அனைத்து தளங்களிலும் காணப்படும் எந்த குப்பைகளிலும் விபத்துக்கு முந்தைய அல்லது விபத்துக்கு பிந்திய நிலையில் அவ்விமானம் தீ பற்றியதற்கான அறிகுறி எதுவும் இல்லையென்று AAIB வெளியிட்ட தொடக்கக் கட்ட விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

விமானம் விபத்திற்குள்ளாகுவது முன்னதாகவே அல்லது விபத்திற்கு முன்னர் தீப்பிடித்ததற்கான அறிகுறி எதுவும் அந்த விமானத்தின் உடைந்த பாகங்களில் தென்படவில்லையென்றும் கூறப்பட்டது.

அந்த விமானம் பறப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை என்பதோடு வழக்கமான அட்டவனையின்படி பராமரிக்கப்படவில்லை.

லைசென்ஸ் இல்லாத தொழிற்நுட்பாளர்களால் அந்த விமானம் பராமரிக்கப்பட்டுள்ளது. மேலும் புறப்படுவதற்கு முன் கூடிய பட்ச 850 கிலோ எடைக்கும் மீறிய அளவில் அவ்விமானம் இருந்ததற்கான ஆதாரமும் கண்டறியப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!