Latestஉலகம்

மியன்மார் மக்கள் போராட்டம் ; முதல் உயிரிழப்பு

யாங்கோன், பிப் 19 – மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் ஆர்ப்பாட்டத்தில், முதல் முறையாக உயிரிழப்பு ஏற்பட்டது.

கடந்த வாரம்,  தலையில்  ஆர்ப்பாட்டத்தின் போது சுடப்பட்ட 20 வயது மதிக்கத்தக்கப் பெண் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ஆர்ப்பாட்டக்காரர்களை கலைவதற்காக போலீசார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டிலே  அந்த பெண் உயிரிழந்ததாக உரிமை ஆர்வலர்கள் குறிப்பிட்டனர்.

இவ்வேளையில் , அந்த பெண்ணின் இறப்புக்கு  நீதி கோரப்படுமென மருத்துவர்கள் கூறியுள்ளனர்.   அந்த பெண் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டதிலிருந்து  மருத்துவமனை பணியாளர்கள் கடும் நெருக்குதலுக்கு ஆளாக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் விசாரிக்கப்படுமென அதிகாரத்துவ தரப்பினர் கூறினர்.

மக்கள் தலைவர் ஆங் சான் சூ ஜி விடுவிக்கப்பட வேண்டுமெனக் கோரி சாலைகளில் இறங்கியிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்பு அதிகாரிகளுடன் கைகலப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  கருத்து வேறுபாட்டினை ஒடுக்க  ராணுவம் இணையத்தை முடக்கி வைத்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!