Latestமலேசியா

மீண்டும் பள்ளிகள் மூடப்படுவதில் எச்சரிக்கையுடன் செயல்படுவீர் – மலேசிய மருத்துவ சங்கம் வலியுறுத்து

கோலாலம்பூர், ஆக 1 – சபாவில் தொடக்க நிலை பள்ளி மாணவி ஒருவர் கோவிட் 19 தொற்றுக்கு உள்ளானதைத் தொடர்ந்து மீண்டும் பள்ளிகள் மூடப்படுவதில் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படும்படி மலேசிய மருத்துவ சங்கமான் எம்.எம்.ஏ (M.M.A) கேட்டுக்கொண்டது.
பள்ளிகளை மூடும் எந்த முடிவும் மிகவும் கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும் . பிள்ளைகளின் தொடக்க மேம்பாடு தொடர்பான தாக்கங்களை கல்வி அமைச்சு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என மலேசிய மருத்துவ சங்கத்தின் தலைவர் டாக்டர் ஞானபாஸ்கரன் தெரிவித்தார்.
பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாவிட்டால் கல்வி ரீதியில் மட்டுமின்றி மனோரீதியிலும் பாதிக்கப்படலாம் என்று டாக்டர் பாஸ்கரன் கூறினார். அதே வேளையில் கோவிட் தொற்று அதிவேகமாக பரவினால் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்படலாம். பள்ளிகளில் மட்டுமின்றி வீடுகளிலும் நிர்ணயிக்கப்பட்ட சீரான விதிமுறைகள் முழுமையாகவும் கடுமையாகவும் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் டாக்டர் ஞானபாஸ்கரன் கேட்டுக்கொண்டார்.
சபாவில் தொடக்கநிலைப் பள்ளி மாணவி ஒருவர் கோவிட் -19 தொற்றுக்கு உள்ளானதைத் தொடர்ந்து மீண்டும் பள்ளிகளை மூடும் சாத்தியம் குறித்து அரசாங்கம் பரிசீலிக்கக்கூடும் என இதற்கு முன் தற்காப்புத்துறைக்கான முதன்மை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!