Latestமலேசியா

முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்ட முதல் நாளிலே 20 பேருக்கு ரிம 1000 அபராதம்

பட்டர்வெர்ட், ஆகஸ்ட் 1 – இன்று முதல் பொது இடங்களில் பொது மக்கள் முககவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பட்டர்வெர்ட் நெடுஞ்சாலை ஓய்விடப் பகுதிகளில் மேற்கொண்ட சோதனையில் முககவசம் அணியாத 20 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நேற்று நள்ளிரவு 1.50 மணியளவில் அவ்விடத்தில் கோவிட்-19 SOP-க்களை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பதை கண்டறியும் சோதனையில் அந்த 20 பேரும் முககவசம் அணியாமல் இருப்பதாக அடையாளம் காணப்பட்டனர். அதே சமயம், தனிமனித இடைவெளியையும் பின்பற்ற தவறியதால் அவர்கள் அனைவருக்கும் 1000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வட செபராங் பெராய் மாவட்ட போலீஸ் தலைவர் நோர்சைனி முகமட் நோர் தெரிவித்தார்.
இதனிடையே, கோவிட்-19 தொற்று தொடர்பாக் முக கவசம் அணிவதோடு இதர SOP- களை பின்பற்றாதவர்களிடம் எந்தவொரு இணக்க போக்கும் காட்டப்பட மாட்டாது என்பதையும் அவர் பொதுமக்களுக்கு நினைவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!