Latestஇந்தியாஉலகம்

முதலையை ஒப்படைக்க 50,000 ரூபாய் கேட்ட கிராமவாசிகள்

புதுடில்லி, செப் 14- 2 மீட்டர் நீளமுள்ள முதலையை பிடித்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த கிராம வாசிகள் அதனை ஒப்படைப்பதாக இருந்தால் 50,000 ரூபாய் பிணைப் பணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மிடானாயா என்ற கிராமத்தில் காணப்பட்ட முதலையை கிராம வாசிகள் பிடித்தனர்.

இந்த தகவலை அறிந்த வனவிலங்கு அதிகாரிகள் அந்த முதலையை தங்களிடம் ஒப்படைக்கும்படி கிராமவாசிகளிடம் கோரிக்கை விடுத்தனர் . 50 ,000 ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே அந்த முதலையை ஒப்படைப்போம் என கிராம வாசிகள் பிடிவாதமாக இருந்ததால் இறுதியில் போலீஸ் தலையிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் அந்த முதலையை பெற்றுச் சென்ற வனவிலங்கு அதிகாரிகள் அதனை கொண்டு ச் சென்று உத்தர பிரதேசத்திலுள்ள கக்ரா ( GHAGRA) ஆற்றில் விட்டனர். இந்தியாவின் வனவிலங்கு சட்டத்தின் கீழ் முதலை பாதுகாக்கப்பட்ட விலங்கு என்பது அந்த கிராமவாசிகள் அறியாமல் இருந்ததால் அதனை அவர்களுக்கு புரிய வைப்பதில் சிரமத்தை எதிர்நோக்கியதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!