Latestமலேசியா

முன்களப் பணியாளர்களுக்கு ஊதியம் செலுத்த பட்ஜெட்டை அங்கீகரிக்கும்படி நிதியமைச்சர் மிரட்டுகிறார் – அன்வார்

கோலாலம்பூர், நவ 15 – நாடாளுமன்றத்தில் வரவுச் செலவுத் திட்டம் அங்கீகரிக்கப்படாவிட்டால்,  ஊதியம் பெற முடியாமல், பொதுச் சேவை ஊழியர்கள் குறிப்பாக முன்களப் பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என, நிதியமைச்சர் கூறியிருப்பது, மிரட்டும் வகையில் இருப்பதாக எதிர்கட்சித் தலைவர்  டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை குரலை முடக்கும் முயற்சி அதுவெனவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே மக்கள் நலன் பேணக்கூடிய திருத்தங்களுடன் கூடிய சிறந்த ஒரு வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யமுடியுமென தாம் நம்புவதாகவும், டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்  அறிக்கை  ஒன்றின் வாயிலாக தெரிவித்தார்.

பக்காத்தான் ஹரப்பான் முன் வைத்த கோரிக்கைகள் 2021 வரவு செலவுத் திட்டத்தில் இல்லை. மிக உயர்வாக குறிப்பிடப்பட்டிருக்கும் பொருளாதார வளர்ச்சிக்கான கணிப்பும் , ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் இல்லை.

கோவிட் பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கான முயற்சிகளையும் அந்த வரவுச் செலவுத் திட்டம் பிரதிபலிக்கவில்லை என,  போர்ட் டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினரான அன்வார் குறிப்பிட்டார்.

எனினும்,  அரசாங்க ஊழியர்கள் குறிப்பாக முன் களப் பணியாளர்களுக்கான ஊதியம் , சலுகை, சுகாதார சேவைக்கான தேவை  ஆகியவற்றை உட்படுத்திய, நிர்வாக செலவுக்கான விவகாரத்தை, எதிர்கட்சியினர் ஆதரிக்கின்றனர்.

எனினும், கோவிட்- 19 பெருந்தொற்றை எதிர்கொள்ளக் கூடிய முழுமையான ஒரு வரவுச் செலவுத் திட்டத்தையே தமதரப்பு ஆதரிக்கும்.

எனவே அரசாங்கம், மக்களவையில் தாக்கல்  செய்த வரவு செலவுத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென , அன்வார் தமது நிலைப்பாட்டினை மீண்டும் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!