Latestமலேசியா

முழு உறைவிடப் பள்ளிகள்; அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும்

கோலாலம்பூர், செப் 15 –  அனைவரையும் உள்ளடக்கிய கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கைக்கு இணங்க, முழு  தங்குமிட வசதி கொண்ட பள்ளிகள் ஏன் தாய்மொழிப் பள்ளிகளிலும் (SJK) தேசிய சமயப் பள்ளிகளிலும்   பயிலும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்பதில்லை என எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பி உள்ளனர்?

தாய்மொழிப் பள்ளிகள் கல்வி அமைச்சால் நிர்வகிக்கப்படும் பாடத்திட்டத்திற்கு ஒத்த உள்ளடக்கத்தைக் கொண்ட பள்ளிகளாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

முழு தங்குமிட வசதியுள்ள பள்ளிகளில் இம்மாணவர்களைச் சேர்க்க மறுக்கும் கொள்கையானது நாடு முழுவதும் உள்ள 1200-க்கும் மேற்பட்ட தேசிய வகை சீனப்பள்ளியிலும் (SJKC)  500-க்கும் மேற்பட்ட தேசிய வகை தமிழ்ப்பள்ளியிலும் (SJKT) படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குக் கல்வி வாய்ப்பில் பாகுபாட்டை காட்டுவதாக அமைந்துள்ளது என  குறிப்பிட்டு,

கூலாய்  நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கல்வித்துறை துணை அமைச்சருமான தியோ நீ சிங்,  சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரும் புறநகர் மேம்பாட்டுத் துறை முன்னாள் துணை அமைச்சருமான  சிவராசா ராசையா , பத்து காஜா  நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார்,  தம்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர். ஹாசன் பஹ்றோம்,  கோத்த பெலூட் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்னரைசா முனிரா ஆகியோர் இணைந்து  கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

ஒற்றுமை மற்றும் இனப் பன்முகத்தன்மையைப் பாராட்டுவது, குறிப்பாக, கல்வி போன்ற முக்கியமான துறைகளில் அது செயல்வடிவம் காண வேண்டுமென  அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

‘மலேசிய குடும்பம்’ மற்றும் அனைவரின் நலன்களையும் கவனித்துக் கொள்வதாக உறுதியளித்துள்ள, மலேசிய பிரதமரின் கொள்கையை நிலைநாட்ட கல்வி அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சிடம் இந்த அவசர வேண்டுகோளைச் சமர்ப்பிப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!