Latestமலேசியா

முழு பொருளாதார அடைப்பு குறித்து பேசப்படவில்லை ; யூரோச்சம் விளக்கம்

கோலாலம்பூர், ஜன 25 – கோவிட் -19 தொற்று அதிகரித்தால் பிப்ரவரி 4-ஆம் தேதிக்குப் பின்னர் நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாக நிறுத்தப்படுமென,  தமது தரப்பில் இருந்து கசிந்திருக்கும் தகவல் குறித்து , யூரோச்சாம் மலேசியா (Eurocham Malaysia)  எனப்படும்  ஐரோப்பிய -மலேசிய வர்த்தக தொழிலியல் சம்மேளனம் விளக்கமளித்திருக்கிறது.

Eurocham Malaysia, அனைத்துலக வாணிப தொழிலியல் அமைச்சுடன் அண்மையில் அதிகாரப்பூர்வமற்ற ரீதியில் சந்திப்பு நடத்தியதாகவும்,  அந்த சந்திப்பின் வாயிலாக  பேசப்பட்ட விவகாரங்கள் அடங்கிய சுற்றறிக்கை தமது உறுப்பினர்களுக்கு  அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அந்த சம்மேளனம் தெரிவித்தது.

அந்த சந்திப்பின் போது,  நாட்டில் அதிகரித்திருக்கும் கோவிட் -19 தொற்று எண்ணிக்கை குறித்து அனைத்துலக வாணிப தொழிலியல் அமைச்சு கவலையை  வெளிப்படுத்தியிருந்தது.
அதற்கான உரிய நடவடிக்கைகளை தொழிற்துறைகள்  எடுக்க வேண்டுமென வலியுறுத்தி இருந்தது.
ஆனால், பிப்ரவரி நான்காம் தேதிக்குப் பின்னர் உடனடியாக , பொருளாதார நடவடிக்கைகள்  முடக்கப்படுமென  அனைத்துலக வாணிப தொழிலியல் அமைச்சு குறிப்பிடவில்லை என  Eurocham Malaysia  தெளிவுப்படுத்தியது.

எனவே, நாட்டின்  பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்து  இயங்குவதற்கான முயற்சிகளுக்கு , மக்கள் அனைவரும் ஒத்துழைப்பைத் தருமாறு  அந்த சம்மேளனம் கேட்டுக் கொண்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!