Latestமலேசியா

முவாபாக்காட் நேசனல் கூட்டணியை பதிவு செய்வதற்கு அம்னோ – பாஸ் இணக்கம்

கோலாலம்பூர், அக் 20 – சங்கங்களின் பதிவகத்தில் முவாபாக்காட் நேசனல் கூட்டணியை பதிவுசெய்வதற்கு அம்னோ மற்றும் பாஸ் இணக்கம் தெரிவித்துள்ளன. 15ஆவது பொதுத் தேர்தலுக்கு தயாராகுவதற்காக அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுக்கிடையே ஒற்றுமையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்திக்கொள்வதற்கு முவாபாக்காட் கூட்டணியின் தலைமைத்துவம் கடப்பாட்டை கொண்டிருப்பதாக அம்னோவின் தலைமைச் செயலாளர அனுவார் மூசாவும் பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தகியுடின் ஹசானும் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியுள்ளனர்.

மாபெரும் ஒருமைப்பாட்டிற்காக இணைந்து பணியாற்றுவதற்காக அம்னோ மற்றும் பாஸ் தலைமைத்துவம் இணக்கம் கண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். அம்னோ மற்றும் பாஸ் கட்சிக்கிடையே நேற்று நடைபெறுவதாக திட்டமிடப்பட்ட அம்னோ மற்றும் பாஸ் கட்சிக்கிடையிலான கூட்டம் நேற்றிரவு ஒத்திவைக்கப்பட்டது.

தேசிய நடவடிக்கை மன்றத்தின் ஆலோசனையின் பேரில் அந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதே போன்று இன்று நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த அம்னோ உச்சமன்ற கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!