Latestமலேசியா

முஹிடினுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இயக்கம் தொடங்கப்பட்டது

கோலாலம்பூர். ஜன 14 – எட்ட முடியாத தூரத்திற்கு சென்றுள்ள நிர்வாகத்திற்கு எதிராக முஹிடின் எதிர்ப்பு பிரச்சார இயக்கம் ஒன்றை இன்று இணையத்தின் மூலமாக தொடங்கியிருப்பதாக CSO எனப்படும் சிவில் இயக்கங்களின் கூட்டணி அமைப்பு தெரிவித்துள்ளது.

அவசர நிலையை பிரகடனம் செய்ததன் மூலம் சிவில் சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதலை பிரதமர் முஹிடின் யாசின் மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்த எதிர்ப்பு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக CSO அமைப்பு கூறியது. #BantahDaruratMuhyiddin என்பதை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்வதன் மூலம் பொதுமக்கள் தங்களது அதிருப்தியை வெளியிடுவதற்கு ஒரு தளத்தை ஏற்படுத்தியிருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. எனவே இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளும்படிCSO அமைப்பு கேட்டுக்கொண்டது.

கோவிட் -19 தொற்று பரவலை தடுப்பதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்தும் முயற்சியாக செவ்வாய்க்கிழமை நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. ஆகஸ்ட் 1 ஆம் தேதிவரை அவசரநிலை அமலில் இருக்கும் காலக்கட்டதில் நாடாளுமன்றம் கூடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதன் மூலம் உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு பிரதமர் கூடுதல் அதிகாரத்தை பெற்றுள்ளார். MCO எனப்படும் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் மூலம் கோவிட் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு CSO ஆதரவு தெரிவித்துள்ளது. அதே வேளையில் அதிகார தரப்பு வானாளவிய அதிகாரத்தை எடுத்துக்கொள்வதை அனுமதிக்க முடியாது என அந்த அமைப்பு கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!