Latestஉலகம்

UK Rail விருதை பிரிட்டன் வாழ் இந்தியர் ஸ்மித்தல் தகே பெற்றுள்ளார்

இங்கிலாந்து, டிசம்பர் 15 – இங்கிலாத்தில் ஆண்டு தோறும் வழங்கப்படும் “UK Rail Award” எனும் விருதை பிரிட்டன் வாழ் இந்தியர் ஸ்மித்தல் தகே பெற்றுள்ளார்.

ரயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களை அங்கீகரிக்கும் விதமாக 2007 முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில், பிரிட்டன் ரயில்வேயைக் கையாளும், மொபிலிட்டி நிறுவனமான அல்ஸ்டாமில் 18 மாத அனுபவத்துடன், 26 வயதான இவரே அந்நிறுவனத்தின் முதல் AI கட்டுப்பாட்டுப் பொறியிளாளர் மற்றும் முதல் தரவு விஞ்ஞானியும் ஆவார்.

மகாராஷ்டிரா, புனே எனும் இடத்தை பூர்வீகமாக கொண்ட இவர், இங்கிலாந்தில் பயின்று, மேல்படிப்புகளை முடித்த பின்னர் இங்கிலாந்து ரயில்வே துறையின் மிக நுணுக்கமான பணிகளை கையாண்டு வருகிறார்.

இவரின் திறமை, உறுதிப்பாடு மற்றும் தொழில்முறை சாதனைகளை கண்டு, இத்துறையில் கால் பதித்த புதிய வரவாக ‘Newcomer of the Year’ விருதை வழங்கி கெளரவித்துள்ளனர்.
ரயில் பயணங்களின் தரவுகளை நேரடியாக கணக்கிட்டு அதன் செயல் திறன், ஒருங்கிணைப்பு மற்றும் ஆற்றலை மேம்படுத்தக்கூடிய புதிய கண்டுபிடிப்பை அவர் செய்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே தனது இந்த உத்வேகத்துக்கு பாட்டி தாத்தாவின் கடின உழைப்பே முன்மாதிரி எனக் கூறியுள்ளார் ஸ்மித்தல் தகே.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!