Latestமலேசியா

முஹிடின் தலைமையிலான பெர்சத்து கட்சி 45 இடங்களில் போட்டியிடும் சபா பெர்சத்து கட்சி அறிவிப்பு

கோத்தா கினபாலு, ஆக 1 – பிரதமர் மொஹிடின் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சி எதிர்வரும் சபா தேர்தலில் 45 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு முன்வந்துள்ளது. இந்த தொகுதிகளில் நம்பிக்கையான மற்றும் நாணயமான மற்றும் வெற்றிபெறக்கூடிய வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என சபா பெர்சத்து கட்சியின் தலைவர் ஹாஜி நோர் கூறினார்.
இந்த தொகுதிகளில் போட்டியிடக்கூடிய 45 வேட்பாளர்களை நாங்கள் அடையாளம் கண்டுவிட்டோம் என்றும் அவர் சொன்னார். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தேர்தல் ஏற்பாட்டு பணிகளை மேற்கொள்வதற்கான கூட்டத்தை பெர்சத்து அடுத்த வாரம் நடத்தவிருப்பதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் ஹாஜி நோர் கூறினார்.

பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியைச் சேர்ந்த இதர கட்சிகளும்,அம்னோ மற்றும் தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளுடன் இணைந்து வெற்றிக்காக பெர்சாத்து பாடுபடும் என்றும் அவர் சொன்னார். வேட்பு மனுத் தாக்கல் தினத்திற்கு முன்னதாக கட்சியின் தேர்தல் கொள்கை அறிக்கை வெளியிடப்படும் என்றும் அவர் சொன்னார். சபாவிற்கு தலைமையேற்பதற்கு சிறந்த மாற்றுக் கட்சியாக பெர்சத்து இருக்கும என ஹாஜி நோர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!