Latestமலேசியா

மேலும் 62 பேர் பாதிப்பு; நாட்டில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,000 கடந்தது

புத்ரா ஜெயா, செப் 17- நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 62 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர். சபாவில் Lahat Datu, பெந்தேங் ( Benteng) தொற்று மையத்தில் 48 பேர் உட்பட சபாவில் மட்டும் 60 பேர் இப்பாதிப்புக்கு உள்ளாகினர் . இதன்வழி மலேசியாவில் கோவிட் தொற்றின் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 10,031 அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

இன்று கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் இருவர் பினாங்கு மற்றும் கெடாவைச் சேர்ந்தவர்களாவர். 26 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்தனர். கோவிட் தொற்றிலிருந்து முழுமையாக குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 9,235 ஆகும். மருத்துவமனைகளில் இன்னமும் 668பேர் சிசிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக எந்தவொரு மரணச் சம்பவமும் பதிவாகவில்லை. நாட்டில் கோவிட் தொற்று பரவியது முதல் இதுவரை 128 பேர் உயிரிழந்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!