Latestமலேசியா

மைசெஜாத்ராவில் தடுப்பூசிக்கு பதிய தொடங்கலாம்

கோலாலம்பூர், பிப் 23 –  பொது மக்கள் இன்று முதல்  MySejahtera  செயலியில்  கோவிட் -19 தடுப்பூசிக்காக பதிந்துக் கொள்ளத் தொடங்கலாம்.

Android , iOS மென்பொருளைக் கொண்ட கைபேசியில் MySejahtera செயலியை மீண்டும் பதிவிறக்கம் செய்வதன் மூலமாகவும் புதுப்பித்துக் கொள்வதன் மூலமாகவும், கோவிட் தடுப்பூசிக்கான பதிவை  அந்த செயலியில் காண முடியும்.

அந்த செயலியில்  இடம்பெற்றிருக்கும் தடுப்பூசிக்கான பட்டனை அழுத்தியவுடன்,  பெயரையும், மைகார்ட் அடையாள அட்டையையும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படும்.

உங்களது தகவல் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர்,  நாட்டின் தடுப்பூசி போடும் திட்டம், முன்களப் பணியாளர்களை உட்படுத்திய முதல் கட்டத்தில் உள்ளதாக  தெரிவிக்கப்படும்.

அடுத்த கட்ட கோவிட் தடுப்பூசி திட்டம் தொடங்கும்போது, அது குறித்து உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுமென அந்த செயலி தெரிவிக்கும்.

எனினும்,  அத்திட்டத்திற்கு பதிந்து கொள்வதற்கு முன்பாகவே சில கூடுதல் தகவல்களை  வழங்கலாம்.

தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புகிறீர்களா ?  உடல் நலப் பாதிப்புகள் உள்ளதா ?
சமூக நலத் துறையுடன் பதிந்து கொண்டுள்ள உடற்பேறு குறைந்தவரா ? போன்ற விபரங்களை வழங்கி ஒருவர்  பதிந்து கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!