
வாஷிங்டன், ஜன 12- அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் மோசமான அதிபர் டோனல்ட் டிரம்ப் என பிரபல ஹாலிவுட் நடிகரும் குடியரசு கட்சியைச் சேர்ந்த கலிபோர்னியா மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான அர்னோல்டு ஸ்வார்ஸ்னேக்கர் (Arnold Schwarzenegger) விமர்சனம் செய்துள்ளார்.
அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த அவர் நியாயமான தேர்தல் முடிவுகளை தடுக்க முயன்றுள்ளார். பொய்களால் அமெரிக்க மக்களை தவறாக வழிநடத்த முய்ன்றுள்ளார். நாடாளுமன்றத்தில் தமது ஆதரவாளர்களை வன்செயலில் ஈடுபட தூண்டியதன் மூலம் தமது பதவிக் காலத்தில் மோசமாக செயல்பட்ட அதிபராகவும் டோனல்ட் டிரம்ப் இருந்துள்ளார் என அர்னோல்டு தெரிவித்தார்.