Latestமலேசியா

ம.இ.கா வின் ஆதரவு பாஸ் கட்சிக்கு தேவையில்லை – கெடா மந்திரிபுசார் முகமட் சனுசி கூறுகிறார்

கோலாலம்பூர், ஜன 25 – எதிர்வரும் பொதுத் தேர்தலில் ம.இ.காவின் ஆதரவு பாஸ் கட்சிக்கு தேவையில்லையென கெடா மந்திரிபுசார் முகமட் சனுசி கூறியுள்ளார். அதோடு 15ஆவது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சிக்கு ம.இ.கா ஆதரவு வழங்காது என அதன் தலைவர்கள் கூறியிருப்பது குறித்து தாம் இனிமேலும் பொருட்படுத்தப்போவதில்லை என்றும் முகமட் சனுசி கூறியுள்ளார்.

முக்ரிஸ் மகாதீருக்கு பதில் கடந்த ஆண்டு கெடா மந்திரிபுசாராக பதவியேற்ற சனுசி , கடந்த 14ஆவது பொதுத் தேர்தலிலும் ம.இ.காவின் ஆதரவு பாஸ் கட்சிக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்தார். ம.இ.கா உறுப்பினர்களில் பெரும்பாலோர் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்குத்தான் ஆதரவு வழங்கியதாகவும் அவர் கூறினார். அதனால்தான் ம.இ.கா ஒரு தொகுதியில் மட்டுமே கடந்த பொதுத் தேர்தலில் வென்றதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்தியர் அல்லாதாரின் ஆதரவு ம.இ.காவுக்குத்தான் தேவை என்றும் முகமட் சனுசி தெரிவித்தார். முகமட் சனுசி அனுபவமற்ற தலைவர் என்பதோடு மற்றவர்களுடன் கலந்து பழகாதவர் என்றும் ம.இ,காவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறியிருந்தார். இது குறித்து கருத்துரைத்த சனுசி ம.இ,கா தலைவர்களின் அறிக்கைகளை தாம் பொருட்படுத்த வேண்டியதில்லை என்றும் கூறினார்.

கெடா மாநிலைத்திற்கான தைப்பூச விடுமுறை முகமட் சனுசி ரத்துச்செய்தததன் மூலம் ம.இ.காவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் , துணைத்தலைவர் டத்தேஸ்ரீ எம், சரவணன் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகள் முகமட் சனுசிக்கு எதிராக கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!