Latestஇந்தியா

யானையின் தலையில் தீ வைத்த கொடூரம்; இருவர் கைது – காணொளி வைரல்

நீலகிரி, ஜன 23 – நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதி அருகே காது மற்றும் முதுகுப் பகுதியில் தீ காயங்களோடு சிகிச்சைப் பெற்று வந்த 40 வயது ஆண் யானை சிகிச்சைப் பலனின்றி இருதினங்களுக்கு முன் உயிரிழந்தது. கிராமத்துக்குள் நுழைந்த அந்த யானையை காட்டுக்குள் விரட்ட சிலர் பெட்ரோல் ஊற்றிய சாக்கை தீப்பற்ற வைத்து அதன் மீது தூக்கி எரிந்துள்ளதாக வனவிலங்குதுறையினர் தெரிவித்தனர். அந்த யானையின் தலை மீது வீசப்பட்ட சாக்கினால் யானையின்  தலை மற்றும் முதுகுப் பகுதியில் தீப்பிடித்து யானை அலறி அடித்துக் கொண்டு காட்டிற்குள் ஓடும் காணொளி வைரலாகியுள்ளது.

மசினகுடி அருகே காயங்களோடு நின்றிருந்த யானைக்கு மருந்து வைத்து வனத்துறையினர் சிகிச்சை அளித்து வந்தனர். ஒரு கட்டத்தில் யானையின் காயம் குணமடையாமல், காதுப்பகுதி முழுவதுமாக கிழிந்து விழுந்தது. இதனால், யானைக்கு ரத்த போக்கு ஏற்பட்டது. மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகளின் உதவியோடு தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு சென்று அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முயற்சித்தனர். ஆனால் யானையின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் இறுதியாக உயிரிழந்ததாக வனத்துறையினர் உறுதிப்படுத்தினர். இதனிடையே, யானைக்கு இக்கொடூரத்தை விளைவித்த இருவரை போலீசார் கைது செய்ததோடு மேலும், ஒரு சந்தேகப் பேர்வழியை தேடி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!