Latestமலேசியா

ரி.ம 105,000 மதிப்புள்ள கடத்தல் மது பானங்கள் பறிமுதல்; ஆடவர் கைது

ஜோகூர் பாரு, அக் 17 – 105,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் மதுபானத்தை பொது நடவடிக்கை படையின் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஜோகூர் உலுதிராமில் தாமான் டத்தோ செல்லம் (Taman Dato Chellam) என்ற இடத்தில் நேற்று மாலை மணி 5,14அளவில் வாகனம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது 2,400 டின்களைக் கொண்ட அந்த கடத்தல் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த வாகன ஓட்டுனரான 33 வயது ஆடவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டு மேல் விசாரணைக்காக தென் ஜோகூர்பாரு போலீஸ் துறைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். சுங்கத்துறை சட்டத்தின்கீழ் அந்த ஆடவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொது நடவடிக்கை படையின் 5ஆவது பட்டாளத்தின் தளபத்திய அதிகாரி சூப்பிரடன்ட்ன் டிமின் அவாங் ( Dimin Awang) கூறினார். இந்த நபர் ஜோகூர் பாரு வட்டாரத்தில் இந்த சட்டவிரோத மதுபானங்களை விற்பனை செய்வதில் சம்பந்தப்பட்டவர் என்றும் அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!