Latestமலேசியா

லிம் குவான் எங் ஜாமின் நிதிக்கு 29 லட்சம் ரிங்கிட் திரண்டது

கோலாலம்பூர், ஆக 12 – டி.ஏ.பியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் வழக்கின் ஜாமின் தொகைக்கான நிதிக்கு இதுவரை 29 லட்சம் ரிங்கிட் திரண்டுள்ளது. நேற்று நண்பகல்வரை 29 லட்சம் ரிங்கிட் நிதி திரண்டதாக டி.ஏ,பின் கூலாய் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ சிங் தமது முகநூலில் இத்தகவலை பகிர்ந்து கொண்டார்.
இந்த நிதி திரட்டும் நடவடிக்கை வெள்ளிக்கிழமையோடு ஒரு நிறைவு அடையவிருக்கிறது. ஜாமின் தொகைக்கு மேலாக நன்கொடை கிடைக்கப்பெற்றால் அந்த தொகை எதிர்வரும் பொதுத் தேர்த்தலுக்கான நிதியில் சேர்த்துக்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் மற்றும் பட்டர்வெர்ட்டில் வெவ்வேறு நீதிமன்றங்களில் பினாங்கின் முன்னாள் முதலமைச்சருமான லிம் குவான் எங் மூன்று லஞ்சக் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளார். முன்னாள் நிதியமைச்சருமான லிம் குவாங் எங் தமக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுக்களையும் மறுத்து விசாரணை கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!