Latestமலேசியா

சம்பளம் இன்னும் கொடுக்கவில்லை; MYAirlineனுக்கு எதிராக ஊழியர்கள் போலீசில் புகார்

கோலாலம்பூர், நவ 1 – தங்களுக்கு இன்னும் சம்பளம் கொடுக்கவில்லையென மைஏர்லைன் ஊழியர்கள் நான்கு போலீஸ் புகார்களை செய்துள்ளனர். இரண்டு போலீஸ் புகார்கள் பண்டார் பாரு சாலாக் திங்கியில் செய்யப்பட்டதாக அந்த போலீஸ் நிலையத்தின் பொறுப்பு அதிகாரி தெரிவித்தார். இந்த விவகாரம் KLIA 2 ஆவது விமான நிலையம் மற்றும் பந்திங் போலீஸ் நிலையங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாக சிப்பாங் OCPD துணை கமிஷனர் வான் கமருல் அஸ்ரான் வான் யூசுப் தெரிவித்தார். இதுதவிரடெங்கில் போலீஸ் நிலையத்திலும் மேலும் இரண்டு புகார்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த புகார்கள் சுபாங் ஜெயா போலீஸ் நிலையத்தின் கவனத்திற்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாக வான் கமருல் கூறினார். நிதி நெக்கடி காரணங்களால் அக்டோபர் 12 ஆம் தேதிமைஏர்லைன் விமான நிறுவனம் தனது நடவடிக்கைகளை திடீரென இடைநீக்கம் செய்தது. மைஏர்லைன்சின் அந்த முடிவினால் 20 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய டிக்கெட்டுகளை வாங்கிய 125,000 பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!