Latestமலேசியா

விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பயங்கரவாத பட்டியலில் இருக்கும்

கோலாலம்பூர். ஆக 11 – 2014ஆம் ஆண்டிலிந்து பயங்கரவாதிகள் பட்டியலில் இருக்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்து தடை செய்யப்பட்ட இயக்கமாக அந்த பட்டியலில் இருக்கும் என நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. உள்துறை துணையமைச்சர் டாக்டர் இஸ்மாயில் முகமட் சைட் இன்று இதனை தெரிவித்தார்.
பணம் வழங்கும் மற்றும் 2001ஆம் ஆண்டின் சட்ட விரோத நடவடிக்கைகள் மூலம் பெறப்படும் பணம் மற்றும் அதனை பயங்கரவாத நடவடிக்கைக்கு வழங்குவதை தடுக்கும் சட்டத்தித்தின் 66வது ( B) (1) விதியின் கீழ் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் பட்டியலிடப்பட்டுள்ளதால் அந்த இயக்கத்திற்கு எதிரான தடை அகற்றப்பட முடியாது என அவர் சொன்னார்.
இந்த விதியின் கீழ் எந்தவொரு கும்பல்களோ அல்லது தனிப்பட்ட நபர்களின் நடவடிக்கைகள் பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைள் அல்லது சிந்தாந்தம் பரவாமல் இருப்பது தடுக்கப்பட வேண்டியுள்ளதாக அவர் சொன்னார். நாடாளுமன்றத்தில் பக்காத்தான் ஹராப்பான் செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் ஜீ கீன் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கியபோது டாக்டர் இஸ்மாயில் முகமட் இதனை தெரிவித்தார்.
2009ஆம் ஆண்டு முதல் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம் செயல் இழந்த போதிலும் இந்த இயக்கம் ஏன் இன்னும் பயங்கரவாத பட்டியலில் இடம் பெற்றிருப்பதற்கான காரணம் என்னவொன்று அவர் வினவினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!