Latestமலேசியா

விவரங்களைப் பதிவு செய்யவில்லை, உணவக வாடிக்கையாளர்களுக்கு ரி.ம 1000 அபராதம்!

பட்டர்வெர்த், செப் 16 – பினாங்கு, பந்தாய் பெர்சே (Pantai Bersih)விலுள்ள உணவகத்துக்குச் சென்றிருந்த போது தனது விவரங்களைப் பதிவு செய்யாததோடு, மை செஜாதெரா (MySejahtera) செயலியைப் பயன்படுத்தத் தவறிய 7 வாடிக்கையாளர்களுக்கு தலா ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதோடு உணவக உரிமையாளர், பல்வேறு குற்றங்களைப் புரிந்திருந்ததை அடுத்து, உணவகத்தை 7 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டிருப்பதாகவும், வட செபெராங் பெராய் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர்சாய்னி முகமட் நோர் (Noorzainy Mohd Noor) தெரிவித்தார்.

வாடிக்கையாளர்கள் கூடல் இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும் முகக் கவசங்கள் அணிந்திருப்பதையும் உறுதிச் செய்யாதது போன்றவை, உணவக உரிமையாளர் புரிந்த குற்றங்களில் அடங்கும்.

வாடிக்கையாளர்கள், உணவகத்துக்குள் நுழையும் முன்பு தங்களின் விவரங்களைப் பதிவு செய்வது கட்டாயமாகும். அதைக் கூட உணவக உரிமையாளரால் உறுதிச் செய்ய முடியாததை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என ஏசிபி நோர்சாய்னி கூறினார்.

நேற்று மீட்சியிலான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மீதான SOP தொடர்பில் பாகான் (Bagan) சுற்றுப்பகுதியில் உள்ள ஐந்து வணிகத் தளங்கள் மீது சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. நாசி கண்டார் உணவகம், கேளிக்கை விடுதி, ஸ்நூக்கர் விளையாட்டு மையம் ஆகியவையும் அதில் அடங்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!