Latestமலேசியா

வீட்டுப் பணிப் பெண் கொலை, அம்பிகாவின் விடுதலையை நிலைநிறுத்தியது மேல்முறையீட்டு நீதிமன்றம்!

புத்ராஜெயா, செப் 22 -ஈராண்டுகளுக்கு முன்பு, இந்தோனேசிய வீட்டுப் பணிப் பெண்ணைக் கொலை செய்த வழக்கில் இருந்து மாது ஒருவரை விடுவித்த பினாங்கு உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றம் நிலைநிறுத்தியுள்ளது.

அம்பிகா எம்.ஏ ஷான் (Ambika M.A. Shan) எனும் அம்மாதுவை வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக, பினாங்கு உயர் நீதிமன்ற நீதிபதி அளித்திருந்த தீர்ப்பில் எந்த தவறும் இல்லை, அது சரியான தீர்ப்பு தான் என, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவர் கொண்ட நீதிபதிகள் குழு அறிவித்துள்ளது.

அதோடு இவ்வழக்கு தொடர்பில் மூன்று சாட்சியாளிகள் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு விட்டனர். அதன் அடிப்படையிலேயே அம்மாதுவை பினாங்கு உயர் நீதிமன்ற நீதிபதி விடுவித்துள்ளார். அதில் எந்த தவறும் நிகழ்ந்திருப்பதாகத் தெரியவில்லை என நீதிபதிகள் குழு தெரிவித்தது

எனவே தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி, அரசு தரப்பு வழக்கறிஞர் செய்திருந்த விண்ணப்பத்தை, மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்வதாக, நீதிபதிகள் குழு அறிவித்தது.

இந்தோனேசிய வீட்டுப் பணிப் பெண் எடெலினா லிசாவோ (Adelina Lisao), உடலுறுப்பு செயலிழந்து மரணமடைந்ததைப் பிரேத பரிசோதனை முடிவுகள் உறுதிப் படுத்தின. இதனை அடுத்து எடெலினாவைக் கொடுமைப்படுத்தி, அவர் உயிரிழக்கக் காரணமாக இருந்ததாகத் தொடுக்கப்பட்டிருந்த வழக்கிலிருந்து கடந்தாண்டு அம்பிகாவை பினாங்கு உயர் நீதிமன்றம் விடுவித்தது.

ஆனால் அவர் விடுதலை செய்த தீர்ப்பு தவறானது எனக் கூறி, 30க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்ட மகஜர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!