Latestஉலகம்

இனி உலகின் உயரமான கட்டிடம் புர்ஜ் கலிஃபா இல்லை

சவுதி அரேபி, ஜன 8 – சவுதி அரேபியாவில் கட்டப்பட்டு வரும் ஜித்தா டவர் தான் புர்ஜ் கலிஃபாவை விட உலகின் மிக உயரமான கட்டிடம் என தகவல் வெளியாகியுள்ளது.

துபாயில் அமைந்துள்ள புர்ஜ் கலிஃபா கட்டிடம் தற்போது உலகின் மிக உயரமான கட்டிடமாக திகழ்வதோடு கடந்த 14 ஆண்டுகளாகக் கின்னஸ் சாதனையையும் தக்கவைத்துள்ளது.

இந்த நிலையில் புர்ஜ் கலிஃபாவை விட உயரமான கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் பெயர் கிங்டம் டவர். இதனை ஜித்தா டவர் என்றும் கூறுகிறார்கள்.

இதன் கட்டுமான கடந்த 2013ஆம் ஆண்டுதான் தொடங்கிய நிலையில் 1,000 மீட்டருக்கு மேல் அதன் உயரம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் சொகுசு வீடுகள், அலுவலகம், சொகுசு குடியிருப்புகள் ஆகியவை அமைந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டால், 3281 அடி உயரம் கொண்ட ஜெட்டா டவர்தான் உலகின் முதல் “1 கிலோமீட்டர் உயர கட்டிடம்” என்ற புகழை பெறும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!